மயிலாடுதுறையில் ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விளக்கமளித்த அவர், ஆளுநரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது தவறானது எனவும், இதனை ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியே கடிதம் மூலம் உறுதிபடுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆளுநரின் கான்வாய் மீது கொடிக்கம்புகள், கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்ற முதலமைச்சர், அவரது பயணத்தின் போது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது என்றார்.
ஆளுநரை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், ஆளுநரின் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.