மாணவர்களுக்கு மே இரண்டாவது வாரத்தில் விசா நேர்காணலுக்கான தேதி ஒதுக்க தொடங்கப்படும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
சென்னையில் பேட்டியளித்த அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகரான டெனால்ட் ஹெப்லின், கொரோனா காலத்திற்கு முன் 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு எட்டு லட்சம் விசாக்கள் வழங்க உள்ளதாக கூறினார்.
ஐ.டி. கம்பெனிகள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோருக்கு செப்டம்பர் மாதம் முதல் விசா நேர்காணலுக்கு தேதி ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அவசர தேவைகளுக்கு அமெரிக்கா செல்வோருக்கும் சிறப்பு அனுமதி வழங்கப்படுவதாகவும், அவசர தேவை என பொய்யாக குறிப்பிட்டு விசா வாங்க முயற்சிக்க வேண்டாம் என்றும் டெனால்ட் ஹெப்லின் அறிவுறுத்தினார்.