தொழில்துறையில் தமிழகம் வேகமாக முன்னேறி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்த்திருப்பதாக கூறினார்.
தொழில் வளர்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே சென்றடையாமல் தமிழகத்தின் முழுமைக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் இருக்க வேண்டும் என்றால் தொழில் வளர்ச்சி மிகவும் தேவையாகும் என தெரிவித்தார்.