விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த திருநங்கை சாதனா முதலிடம் பெற்றார். கூவாகத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோவில் விழாவின் தொடக்கமாக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள் நடைபெற்றன.
அதன் பிறகு திருநங்கைகளின் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும், கல்வி, வேலை வாய்ப்புகளில் உள்ள திருநங்கைகளின் அணிவகுப்பும் நடந்தது. அதனை தொடர்ந்து, மிஸ் திருநங்கை அழகிப்போட்டிக்கான தேர்வு நடந்தது.
3சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னையை சேர்ந்த சாதனா முதல் இடத்தையும், சென்னையை சேர்ந்த மதுமிதா 2ஆம் இடத்தையும், சென்னையைச் சேர்ந்த எல்சா 3ஆம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, நடிகர் சூரி, நடிகை நளினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.