கன்னியாகுமரி-நெல்லை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள சூராணிக்கரை நாகக்கன்னி அம்மன் ஆலயத்தில் கொதிக்கும் பாலை உடலில் தெளித்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராதாபுரம் தாலுகா பழவூர் - சிதம்பரபுரம் மெயின் ரோட்டில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் 108 லிட்டர் பால் அம்மன் முன்பு தீ மூட்டி கொதிக்க வைக்கப்பட்டது.
பின்னர் அம்மன் அருள் வந்த பக்தர் ஒருவர் அந்த கொதிக்கும் பாலை வேப்பிலையால் தொட்டு உடலில் தெளித்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். மேலும் இப்பால் நோய் தீர்க்கும் பிணி மருந்தாக பக்தர்களுக்கு அருள் பிரசாதமாக வழங்கப்பட்டது.