திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நண்பகலில் நிழல் இல்லாத நாள் என்ற அறிவியல் நிகழ்வு ஏற்பட்டது.
சூரியன் தலைக்கு செங்குத்தாக மேலே இருக்கும் போது நமது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகும். அதாவது நிழல் நமது காலடியிலேயே விழும். இது நிழல் இல்லா நாள் நிகழ்வு எனப்படுகிறது.
ஆண்டிற்கு 2 முறை மட்டுமே ஏற்படும் இந்த அரிய நிகழ்வு கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் நண்பகல் 12.20 மணியளவில் தென்பட்டது. அதனை ஆராய்ச்சியாளர்கள் காட்சிப்படுத்தினர்.