காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே கேஸ் சிலிண்டர்களுடன் சென்ற லாரி விபத்துக்குள்ளான நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர் சிலிண்டர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து இண்டேன் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அரக்கோணம் நோக்கி லாரி சென்றுக்கொண்டிருந்தது.
அதிக சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி வேகமாக இயக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், உத்தரமேரூர் அருகே குறுகலான சாலையில் கட்டுப்பாட்டை இழந்து ஓரமாக இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநர் சிறுகாயங்களுடன் தப்பிய நிலையில், லாரியும், அதில் இருந்த சிலிண்டர்களும் அப்புறப்படுத்தப்பட்டன.