செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நரிக்குறவர் இன வீட்டில் காலை உணவு சாப்பிட்டு தேநீர் அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Apr 15, 2022 03:30:41 PM

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே நரிக்குறவர் இன மக்களின் குடியிருப்புகளுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ததோடு, அங்குள்ள வீட்டில் கறிக்குழம்புடன் காலை உணவும், தேநீரும் அருந்தினார்.

ஆவடி அருகே பருத்திப்பட்டு பகுதியில் வசித்து வரும் நரிக்குறவ இன பள்ளி மாணவிகள் மூன்று பேர் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பேசிய வீடியோ வெளியான நிலையில், அந்த பகுதிக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், அந்த மாணவிகளுடன் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர், அவர்களது குடியிருப்புக்கு நேரில் வருவதாக கூறியிருந்தார். அதன்படி, பருத்திப்பட்டு மற்றும் திருமுல்லைவாயல் ஜெயா நகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவ இன மக்களுக்கு சாலை வசதி, கழிவறை, தெருவிளக்கு, மின்சார வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நரிக்குறவ பயனாளிகள் சுமார் 200 பேருக்கு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, முதியோர் உதவித் தொகை, சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள், மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களோடு முதலமைச்சர் கலந்துரையாடினார். பலர் முதலமைச்சருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வீடியோவில் பேசியிருந்த திவ்யா என்ற மாணவியின் வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாசிமாலை அணிவித்தும், பூ கொடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த வீட்டில் தேநீர் அருந்திய முதலமைச்சர், இட்லி, வடை, கறிக்குழம்புடன் காலை உணவு சாப்பிட்டார்.

இதனையடுத்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர், காரத்துடன் கறிவிருந்து சாப்பிட்டு வந்ததாக கூறியதோடு, விளிம்பு நிலை மக்களுக்கு என்றைக்கும் தி.மு.க. அரசு துணை நிற்கும் என உறுதியளித்தார்.


Advertisement
கரூர் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது தீப்பற்றி எரிந்த ஓலா எலக்ட்ரிக் பைக்
புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்ற காரில் கிடந்த 5 பேரின் சடலங்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்
விழுப்புரத்தில் நகைக் கடையில் நூதன முறையில் திருடிவிட்டு தப்பிய 3 பெண்களை போலிசாரிடம் ஒப்படைப்பு
கரூரில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம்
கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிச் சென்ற 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர் 6 பேர் கைதுவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர் 6 பேர் கைது
உளுந்தூர்ப்பேட்டையில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு- 14 பேர் காயம்
மரக்காணம் அருகே மழை பெய்தபோது வேப்ப மரத்தடியில் ஒதுங்கிய விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு
கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!
டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Advertisement
Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !


Advertisement