தென்காசி பாலருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்து உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த திடீர் மழையால் பாலருவியில் தண்ணீர் கொட்டுகிறது.
கொரோனா காரணமாக குளிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ், வாட்டி வதைக்கும் வெயில் உள்ளிட்டவைகளால் திணறி வந்த மக்கள் அருவில் உற்சாக ஆட்டம் போட்டனர்.
வனத்துறை சார்பில் அருவி பகுதியில் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கூடுதல் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.