கன்னியாகுமரியில் மாணவர்களை மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் தையல் பயிற்சி ஆசிரியையாக பணிபுரிந்து வரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பியாட்ரீஸ் தங்கம் என்பவர், வகுப்பு நேரத்தில் வகுப்பு எடுக்காமல் கிறிஸ்தவ மத கருத்துக்களை சொல்லிக் கொடுத்து பிரார்த்தனை செய்ய சொன்னதாக கூறப்படுகிறது.
மேலும், இந்து மதக் கடவுள்களை அவதூறாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரணியல் போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் முன்னிலையில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் ஆசிரியர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந்த வீடியோ வெளியானதை அடுத்து, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதோடு, குற்றச்சாட்டில் சிக்கிய ஆசிரியையிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஆசிரியை பியாட்ரீஸ் தங்கத்தை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.