வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், நீலகிரி, திருப்பூர், கோவையில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூரில் கனமழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
நாளைய தினம் தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூரில் கனழை பெய்யக்கூடும் எனவும், மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம், குமரிக்கடல், லட்சத்தீவு, கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.