தமிழகத்தில் சொத்து வரி உயர்வைத் தொடர்ந்து காலி மனை வரியும் 100% சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், சொத்துவரி சீராய்வு பணிகள் தொடங்கியிருப்பதன் காரணமாக காலிமனை வரிவிதிப்பு முறை செய்ய இயலாததால் மக்கள் புதிய கட்டிடம் கட்ட விண்ணப்பிக்க முடியாத சூழல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், சொத்துவரி சீராய்வு பணிகள் நிறைவடையும் வரை காலிமனை வரியை மக்கள் தற்காலிகமாக வழங்கலாம் என்றும், பணிகள் முடிந்தவுடன் புதிய வரி விகிதங்களின் படி வரிவிதிப்பு செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.