செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பீஸ்ட் ரசிகர்களுக்கு பிரம்பால் பூஸ்ட் கொடுத்த போலீஸ்.. ரசிகர் காட்சி கேட்டு மறியல்..!

Apr 07, 2022 05:35:58 PM

கடலூரில் பீஸ்ட் படத்திற்கு ரசிகர் காட்சி தர மறுத்த திரையரங்கை கண்டித்து சாலைமறியல் செய்த விஜய் மக்கள் இயக்கத்தினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். 

விஜய் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கடலூர் நகர் பகுதியில் அமைந்துள்ள 4 திரையரங்குகளிலும்  விஜயின் பீஸ்ட் திரைப்படம் திரையிடுவதற்காண ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நான்கு திரையரங்கிலும் முதல் நாள் ரசிகர் காட்சிகள் வெளியிட வேண்டும் என்றும், அது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒளிபரப்ப வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடலூர் பாரதி சாலையில் அமைந்துள்ள நியூ சினிமா திரையரங்கில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு ரசிகர் காட்சிக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் கடலூர்- புதுவை சாலையில் திரையரங்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பாரதி சாலை மற்றும் அண்ணா சாலையில் முழுவதுமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் விஜய் ரசிகர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்தி விஜய் ரசிகர்களையும் கலைத்தனர்

ரசிகர்காட்சி தந்தே தீர வேண்டும் என்று அடம் பிடித்த அ.இ.த.வி.ம.இ அமைப்பின் நிர்வாகிகளை சட்டையை பிடித்து இழுத்துச்சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளான சீனு மற்றும் ராஜசேகர் மற்றும் ராஜ்குமார் ஆகியோரைகாவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரையரங்குகளில் மொத்த டிக்கெட்டுகளையும் வாங்கிக் கொள்ளும் அ.இ.த.வி.ம.இ அமைப்பின் நிர்வாகிகள், ரசிகர் காட்சி என்று கூறி ரசிகர்களிடம் கூடுதல் விலை வைத்து டிக்கெட் விற்பனை செய்வதை தவிர்க்கவும், திரையரங்கில் உற்சாகம் என்ற பெயரில் ரசிகர்களின் அத்துமீரல்களை சமாளிக்கவும் ரசிகர் காட்சி ரத்து செய்யப்படுள்ளதாக திரையரங்கு நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
பிரபல சென்னை ரவுடி CD மணி சேலத்தில் கைது - துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீஸ்
கெட்டுப் போன பப்ஸ் விற்பனை செய்த புகார் - சேலம் பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு சீல்
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - போலீசார் விசாரணை
தரக்குறைவாகப் பேசியதால் தாக்குதல்.. பெட்டிக்கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது
குப்பைக் கிடங்கில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!!
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement