சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவிகள், பல்கலைக்கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்தவொரு ஊடகத்திற்கும் பேட்டியளிக்கக் கூடாது எனவும் மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த பிரேம்குமார் மீது முதுகலை மாணவி ஒருவர் பாலியல் புகாரளித்தார்.
புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் தலைமறைவான பிரேம்குமாரை தேடி வரும் நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பு மாணவர்கள், பிரேம்குமார் மீது மாணவி அளித்த புகார் உண்மைக்கு புறம்பானது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்ததோடு செய்தியாளர்களையும் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், பெரியார் பல்கலை. பதிவாளர் தங்கவேல் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.