திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் உடலை பின்புறமாக கீழ்நோக்கி வளைத்து, தலையால் கால்களை தொடக்கூடிய டிம்பாசனம் எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 66 முறை செய்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்த எழிலன் - சுதா தம்பதியரின் 6-ஆம் வகுப்பு படித்து வரும் மகள் தரங்கிணி இதற்காக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.