சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை உறுப்பினர்கள் புகழ்ந்து பேசவோ, பெருமைப்படுத்தி பேசவோ பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
கேள்வி நேரத்தின் போது பேச்சைத் தொடங்கிய, ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., சண்முகையா, முதலமைச்சரை புகழ்ந்து பேசி கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.