காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல வேண்டியிருந்தது.
எனவே அங்கு பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், கடந்த 2017ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 56 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொளி வாயிலாக மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகர் பகுதிகளை இணைக்கக் கூடிய இந்த பாலத்தால் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் விரைந்து செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.