விழுப்புரம் நெடுஞ்சாலையில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சாலையின் மறுபக்கத்தை கடக்க முயன்ற அரசு சொகுசுப் பேருந்து மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
சென்னை நோக்கி வந்த பேருந்து ஜானகிபுரம் அருகே வளைவில் திரும்பிய போது, வேகமாக வந்த சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
சம்பவ இடத்திலேயே லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணித்த 7 பேர் காயங்களுடன் உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.