கரூரில், டீ கடைக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர்.
சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டீ கடையில், உள்ள அலமாரியை கடை ஊழியர் காலையில் திறந்தபோது உள்ளே சுமார் 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பு இருந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அவர்கள், அந்த கட்டுவிரியன் பாம்பை பத்திரமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றனர்.