மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நிலையான மற்றும் மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 29,30 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் எக்மோ கருவி பொருத்தப்படுவது தேவையா என ஆலோசிக்கப்பட்டதாகவும், அப்போது தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டதாக மருத்துவர் பால் ரமேஷ்ம், ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன் அவரை சந்தித்ததாகவும் அப்போது ஜெயலலிதா நலமுடன் இருந்ததாகவும் மருத்துவர் நரசிம்மனனும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.