திருவள்ளூர் மாவட்டம் திருவேலங்காட்டில் தொழிற்பேட்டை அமைப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டபேரவையில் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததன் அடிப்படையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் தொகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படுமா என திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.