தமிழ்நாட்டில் 193 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் 23 இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உறுப்பினரின் வினாவுக்குப் பதிலளித்த அவர், சோழவந்தான் தொகுதி கல்வேலிப்பட்டி, கொண்டையம்பட்டி, இடையபட்டி ஆகிய இடங்களில் புதிய துணை மின் நிலையம் அமைத்துத் தரப்படும் எனத் தெரிவித்தார்.