தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை போல உயர்மட்டக்குழு அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலக சதுரங்க சாம்பியன் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 12 பேர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்குழு புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஓராண்டிற்குள் அரசுக்கு பரிந்துரையை வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.