தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடை ஒட்டி அமைந்துள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை, காலி மது பாட்டில்களை சேகரிப்பதற்கு புதிய டெண்டர் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் பார்களை மூட தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
அதன் விசாரணையில், வழக்கிற்கு அப்பாற்பட்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தாங்கள் பார்களை நடத்த அதிகாரம் உள்ளதாகவும் டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, பார் நடத்த டெண்டர் கோரலாம் என உத்தரவிட்டனர்.