அரியலூரில், ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன.
குறிஞ்சி ஏரிக்கரையை ஆக்கிரமித்து சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக, பலர் வீடுகட்டி வசித்து வந்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில், அப்பகுதியில் உள்ள சுமார் 150 வீடுகளை அகற்றுவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும் மக்கள் வீடுகளை காலி செய்யுமாறு தினமும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று பொக்லைன் இயந்திரங்களுடன் அதிகாரிகள் சென்றதைக் கண்ட குடியிருப்புவாசிகள், வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றதால் போலீசார், அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளாக இன்றும் பணிகள் நடைபெறுகின்றன.