நாளை முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், காவல்நிலையத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பெண்கள், சிறுவர் - சிறுமியர்களை எக்காரணத்திற்காகவும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரக்கூடாது எனவும், முக்கிய வழக்குகளில் கைதாகும் நபர்கள், பழைய குற்றவாளிகள் உள்ளிட்டோரிடம் உடனடியாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.