திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஓடும் ரயிலிருந்து குதித்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரியிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சகபயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், தனியார் ஆடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரியும் துர்கா தேவி என்பவர் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் முறிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் மின்சார ரெயிலில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.