திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டரின் டிராலி கவிழ்ந்து, கரும்பு கத்தைகள் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தனசேகர் என்பவர், வேலூர் - திருச்சி புறவழிச்சாலை வழியாகத் தனியார் ஆலைக்கு டிராக்டரில் கரும்பு ஏற்றி சென்றுள்ளார். எதிரே வாகனம் வந்ததால் டிராக்டரை தனசேகர் வேகமாகத் திருப்பியபோது டிராலி நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
சாலையில் சரிந்த கரும்பு கத்தைகளால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு விரைந்த போலீசார் ஜேசிபி எந்திரம் மூலம் அவற்றை அள்ளி அப்புறப்படுத்தினர். டிராலியில் அதிக பாரம் ஏற்றியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.