திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ராட்சத தேனீக்கள் கடித்ததில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அமரம்பேடு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் உள்ள பெரிய ஏரியின் கரை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. கரையின் மேலே இருந்த முட்புதரை பணியாளர்கள் வெட்ட முயற்சித்த போது, அதில் இருந்த ராட்சத தேனீக்கள் அங்கிருந்தவர்களை கடித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, 49 பேர் மீட்கப்பட்டு மாதர்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.