பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கற்பித்தல் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தற்போது ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக கரும்பலகையில் சாக்பீஸ் கொண்டு எழுதி பாடங்கள் நடத்தப்படும் நிலையில், ஸ்மார்ட் வகுப்பறைகளில் நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகிறது.
அந்த வகுப்பறை, கணினி, மின்னணு திரை மற்றும் இணைய வசதியுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும். அதன் வாயிலாக ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட பாடத்தை நடத்த திரையில் படங்ளை காண்பித்து அவற்றை மாணவர்களின் மனதில் ஆழமாக பதிய வைக்க முடியும்.
மேலும், இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளில் வெளி ஊர் அல்லது வெளி மாநிலங்களில் இருக்கும் கௌரவ பேராசிரியர்கள் உள்ளிட்டோர் மாணவர்கள் முன் காணொலி அழைப்பு வாயிலாக தோன்றி விளக்க முடியும்.