மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டடம் கட்டப்படும் வரை தற்காலிகமாக இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களைச் சேர்க்கத் தமிழக அரசு அனுமதித்த நிலையில் அதற்கான வகுப்புகள் இன்றுமுதல் தொடங்கியுள்ளன.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டடங்கள் இன்னும் கட்டப்படாத நிலையில், எய்ம்சில் மருத்துவம் படிக்க இந்த ஆண்டில் 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கட்டடம் கட்டும் வரை தற்காலிகமாக எய்ம்ஸ் மாணவர்களுக்கு இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியின் ஐந்தாவது தளத்தில் வகுப்புகள் நடத்தத் தமிழக அரசு அனுமதித்துள்ளது.
அதன்படி எய்ம்ஸ் மருத்துவமனையின் 8 பேராசிரியர்கள் இராமநாதபுரத்துக்கு வந்துள்ளனர். இதையடுத்து எய்ம்ஸ் மாணவர்களுக்கு இன்றுமுதல் வகுப்புகள் தொடங்கியுள்ளன.