அவசர காலங்களில் பெண்கள் உடனடியாக புகார் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி என்ற புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை செல்போனில் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்து புகார் அளிக்கலாம்.
அத்தோடு, புகைப்படங்கள் மூலமாகவோ, சிறிய அளவிலான வீடியோ வாயிலாகவும் புகார் அளிக்கலாம் எனவும், இந்த செயலியில் காவல் நிலையங்களின் இருப்பிடம், நேரடி அழைப்பு எண், கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விபரம், location பரிமாற்றும் வசதி, போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் செலுத்தும் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு சுமார் 5கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ள 69 புதிய வாகனங்களையும் முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.