திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டிய கடல் பகுதி 2-வது நாளாக சில மீட்டர் தூரம் உள்வாங்கியதால் கடலில் இருந்த சிறிய பாறைகள் மற்றும் மணல் திட்டுக்கள் வெளியே தெரிந்தன.
நேற்று இதே பகுதியில் 100 மீட்டர் தூரம் வரை கடல் நீர் உள்வாங்கிய நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை மீண்டும் சுமார் 100 மீட்டர் தூரம் வரை கடல் நீர் உள்வாங்கியது.
அதன் காரணமாக இதுவரை தென்படாத பாறைகள் மற்றும் மணல் திட்டுக்கள் வெளியே தெரிய தொடங்கியுள்ள நிலையில், அவற்றின் அருகே பொதுமக்கள் புகைப்படம் எடுத்தனர்.