நித்யானந்தா வழியில் அன்னபூரணியும் திருவண்ணாமலை அருகே ஆசிரமம் தொடங்கி உள்ளார் . ஆன்மிகம் என்ற பெயரில் நடக்கின்ற ஆசிரமப்வசூல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
அடுத்தவர் கணவரை அபகரித்த பஞ்சாயத்து விவகாரத்தால் பிரபலமானவர் அன்னபூரணி..!
மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அன்னபூரணி, திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த போலீசார் பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால் திட்டமிட்ட நிகழ்ச்சிகள் ரத்தானது.
இந்த நிலையில் தனக்கு என்று நிரந்தர முகவரி வேண்டும் என்றும் போலீஸ் தொல்லை இல்லாமல் தனது தொழிலை நடத்த வேண்டும் என்பதற்காகவும் நித்தியானந்தா வாழ்க்கையை தொடங்கிய திருவண்ணாமலையை அன்னபூரணி தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகின்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த இராஜாதோப்பு பகுதியில் சொந்தமாக நிலத்தை வாங்கி அதில் ஆசிரமம் ஒன்றை அமைத்துள்ளார் அன்னபூரணி. இதன் திறப்பு விழாவில் பேசிய அவர், அனைத்து பொது மக்களுக்கும் ஆன்மீக பயிற்சி வழங்குவதாகவும், ஆன்மீக பயிற்சி வழங்கி அவர்களுக்கு முக்தி அளிக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல்வேறு பெரு நகரங்களை விடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரமம் தொடங்க என்ன காரணம் என்று செய்தியாளர்களின் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தன்னால் அதிக பணம் செலவழிக்க முடியாது, குறைந்த அளவில் பணம் செலவழித்து இந்த இடத்தை வாங்கியதாகவும், இந்த இடத்தில் வரும் பொதுமக்களுக்கு ஆன்மீகம் மற்றும் அதனை சார்ந்து வரும் அனைத்து விஷயங்களையும் போதித்து அவர்களுக்கு முக்தி அடைய பயிற்சி தருவதாக தெரிவித்தார்.
ஆன்மிகம் என்றால் அதற்கான தனி ஆடை அணிய தேவையில்லை, உணவு பழக்க வழக்கங்கள் எதுவும் தேவை இல்லை, ஆன்மீகமும் நடைமுறை வாழ்க்கையும் ஒன்றுதான் என்பதை தான் புரியவைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.