தமிழகத்தில் இதுவரை அமலில் இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளும்படி மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கோவிட் தடுப்பூசி மற்றும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை தமிழக பொது சுகாதாரத்துறை வாபஸ் பெற்றுள்ளது.
கோவிட் தடுப்பு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொண்டுள்ளது.இது குறித்து அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் சுகதாரத்துறை இயக்குனர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி பின்பற்றுவது சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்,விழிப்புணர்வோடு இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.