சேலத்தில் தன்னிடம் பயின்ற மாணவியை சாதி பெயரை சொல்லி திட்டியதோடு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரலாற்று துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த பிரேம்குமார் என்பவன், தன்னிடம் பயின்ற மாணவியை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
சூரமங்களம் மகளிர் போலீசில் மாணவி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலிசார், உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீது பாலியல் தொந்தரவு அளித்தது, கொலை மிரட்டல் விடுத்தது, சாதி பெயரை சொல்லி திட்டியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரியார் பல்கலைக்கழக நிர்வாக ஆட்சிக்குழு தொடர்பான பணி நீட்டிப்பு தீர்மானம் குறித்த தகவல்களை வெளியில் கசியவிட்டதாக பிரேம்குமார் கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது தற்போது பாலியல் வழக்குப்பதியப்பட்டுள்ளது.