தூத்துக்குடியில் தங்கையின் காதலனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய அண்ணனை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சிவன் கோவில் அருகேயுள்ள தையல்கடை ஒன்றில் பணிபுரிந்து வரும் உதயகுமாரும் பக்கத்துக் கடையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
பெண் வீட்டார் தரப்பில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், சனிக்கிழமை இரவு உதயகுமார் வேலை செய்யும் தையல்கடைக்குச் சென்ற பெண்ணின் அண்னன் முத்துராமனும் அவனது நண்பனும் உதயகுமாருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
சிறிது நேரத்தில் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த முத்துராமன், உதயகுமாரின் வயிற்றுப் பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளான்.
உதயகுமாரை பக்கத்துக் கடைக்காரர்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், தப்பியோடிய முத்துராமனையும் அவனது கூட்டாளியையும் போலீசார் தேடி வருகின்றனர்.