ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வு உறுதியாக நடைபெறும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் புதிய வழித்தடத்தில் பேருந்துப் போக்குவரத்தைத் தொடக்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழக அரசு சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும் அதே நேரத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்கான சட்டப் போராட்டமும் தொடரும் என அமைச்சர் தெரிவித்தார்.