தமிழகத்தில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவுகளை எடுக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பள்ளிகளே மாணவர்களுக்கான பாடத் திட்டம், வினாத்தாள் வடிவமைப்பு உள்ளிட்டவைகளை முடிவு செய்து தேர்வு நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.