எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து அழைத்துச் சென்றனர். ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 12 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கூறப்படுறது. ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பாமல் 51 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர் என்பதும் தற்சமயம் வரை 35 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.