மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கள்ளழகர் கோவில் இணை ஆணையர் அனிதா, விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
அந்த நிகழ்வின் போது கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க பக்தர்கள் நவீன இயந்திரங்களை பயன்படுத்த வேண்டாமெனவும், சுவாமி சிலை சேதமடையும் நிலை ஏற்படுவதால் பக்தர்கள் அதனை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், கள்ளழகர் புறப்பாடு எதிர்சேவையின் போது ஜி.பி.எஸ் மூலம் அழகர் எங்கு உள்ளார் என்பதை கண்டறியும் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.