கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மாணவர் ஒருவரின் ஆடைகளைக் கிழித்து தாக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குனியமுத்தூரில் உள்ள நேரு கல்லூரியில் பிபிஏ துறை மாணவர்களுக்குள் சீனியர் - ஜூனியர் பிரச்சனை உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டது.
மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறிய நிலையில், கேரளாவை சேர்ந்த சீனியர் மாணவரை 10க்கும் மேற்ட்ட ஜூனியர் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அரை நிர்வாணமாக்கி தாக்கினர்.
மேலும், அந்த மாணவனின் ஐபோனையும் பறித்துக் கொண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.