செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அட்ஜஸ்ட் பண்ணிக்கோமா.. மகளின் கற்பை விற்ற தாய்.. பர்னிச்சர் கடை பார்ட்டிக்கு ஜெயில்..!

Mar 31, 2022 10:18:52 PM

கன்னியாகுமரியில் 11ஆம் வகுப்பு மாணவியை மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரனும், அதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளின் கற்பை விற்க துணிந்த தாயிடம் இருந்து தோழியின் துணிகர செயலால் மாணவி காப்பாற்றப்பட்ட கதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

கடந்த 2 நாட்களுக்கு முன் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொடர்பு கொண்ட 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவர், தன்னை மூன்று மாதங்களாக ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வருவதாகவும், தன்னை காப்பாற்றும்படியும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

உடனடியாக விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், தோழியின் வீட்டில் தஞ்சமடைந்திருந்த அந்த சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

சிறுமியின் தந்தை சில வருடங்களுக்கு முன் முதுகு தண்டு வட பிரச்சனையால் படுத்த படுக்கையாக வீட்டிலேயே முடங்கிய நிலையில், குடும்ப வறுமையை சமாளிக்க அவரது தாயார் புதுக்கடை பகுதியிலுள்ள ராஜையன் என்பவன் நடத்தி வரும் பர்னிச்சர் கடையில் வேலைக்கு பார்த்து வந்தார்.

வேலைக்குச் சென்ற இடத்தில் ராஜையனுடன் சிறுமியின் தாய்க்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான சின்ராசை கையிலே பிடிக்கமுடியாது என்ற சினிமா பட வசனத்தை போல, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் வீட்டுக்கு வரும் ராஜையன், அவரது தாயுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவ்வப்போது சிறு தொகையையும் ராஜையன் சிறுமியின் தாய்க்கு கொடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், 2 மாதத்திற்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் வீட்டுக்கு வந்த ராஜையன் தனது தாய் இல்லாததால், தன்னை வலுக்கட்டாயமாக அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வேதனையுடன் சிறுமி போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

ராஜையனின் நாசகார லீலைகளை சிறுமி தனது தாயிடம் சொன்ன நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் இருந்த அந்த கொடூரத் தாய், ''Uncle-க்கு உன்மேல ஆசை மா....கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'' என்று மகளின் கற்பை விற்க துணிந்ததோடு, வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வீட்டுக்கு வந்து தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதை ராஜையன் வழக்கமாக்கி விட்டதாகவும் சிறுமி வாக்குமூலம் அளித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, பயத்திலேயே இருந்த சிறுமி செய்வதறியாமல் தனது நெருங்கிய தோழியிடம் நடந்ததை கூறியிருக்கிறார். அந்த தோழி கொடுத்த யோசனையின் படி தான் குழந்தைகள் நல அலுவர்களை தொடர்பு கொண்டதாக சிறுமி கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். இதனையடுத்து,
சிறுமியை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், குளச்சல் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகாரளித்தனர்.

சிறுமியை மூன்று மாதமாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி வந்த ராஜையனையும், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நாகர்கோவில் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். தாயால் கைவிடப்பட்ட சிறுமி தோழியின் தக்க யோசனையால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.


Advertisement
94 வயது வரை உழைத்த கலைஞரின் பெயரை வைப்பதில் என்ன தவறு? எக்ஸ் தளத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
ஷூவுக்குள் தங்கக் கம்பிகளை மறைத்துத் திருடிய நகைக்கடை ஊழியரை மேற்கு வங்கம் சென்று கைது செய்த போலீசார்
ஆண்டிப்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
140 வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையன் கைது
மண்ணையும் தண்ணீரையும் கலந்து ஆட்டின் வயிற்றில் ஊற்றி விற்பனை... ஏமாந்தவர் வியாபாரியுடன் வாக்குவாதம்
பணியில் சேருபவர்களைவிட பணிகளை உருவாக்குபவர்களே தேவை-பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
நிதிக்கமிஷன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு வருகை
மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு அதிகாரிகள் அஞ்சலி
அமெரிக்காவில் கேரம் போட்டியில் தங்கம் வென்ற தமிழ் மாணவி மகளுக்குப் கேரம் பயிற்சி அளித்த ஆட்டோ ஓட்டுநர்
பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்

Advertisement
Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்

Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்


Advertisement