தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.ஜி.எம்.மாறனின் 216 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2014ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி அமலாக்கத் துறையிடம் புகாரளித்திருந்தது. இந்த விவகாரத்தில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, மும்பை ஸ்டாண்டர்ட் ஸ்டேட் வங்கியும் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குனருமான எம்ஜிஎம் மாறன் உடந்தையாக இருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அனுமதியில்லாமல் பங்குகள் ஒதுக்கப்பட்டதை அமலாக்கத்துறையினர் கண்டறிந்தனர். இந்நிலையில், ஏற்கனவே 293 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 216 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.