மேட்டுப்பாளையம் அருகே மலைவாழ் மக்களின் குறைகளை கேட்கச் சென்ற கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன், அவர்களுடன் சேர்ந்து நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
பில்லூர் வனப்பகுதியில் உள்ள மலைக்கிராம மக்களின் தேவைகளை, அவர்களது இடத்திற்கே சென்று கேட்டறியும் வகையில் கொடியூர் மலைக்கிராமத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
அதில், மலைவாழ் மக்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். இதனையடுத்து பழங்குடியின மக்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், பாரம்பரிய இசைக் கருவிகளை கொண்டு இசைத்து நடனமாடிய மலைவாழ் மக்களுடன் இணைந்து ஆட்சியர் சமீரனும் நடமாடினார்.