டெல்லியில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்று பல பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர் வீராங்கனைகள் சென்னை எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு சிலம்பம் சுற்றி திறமையை வெளிப்படுத்தினர்.
திருவொற்றியூரை சேர்ந்த 'யுத்த வர்ம' என்ற சிலம்பாட்டப் பயிற்சி மையத்தை சேர்ந்த இந்த வீரர்கள், தேசிய சிலம்ப போட்டியில் கலந்துக்கொண்டு வெவ்வேறு பிரிவுகளில் 20 தங்கம் மற்றும் 10 வெள்ளிப் பதக்கங்களை வென்று திரும்பினர்.
டெல்லியிலிருந்து தமிழகம் வந்த வீரர்களுக்கு காவல் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.