பாரத் நெட் திட்டத்தின் கீழ் மேலும் 15ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் ஓராண்டுக்குள் இணைய வசதிகள் ஏற்படுத்தப்படும் என தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவதற்கான 509 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்தானது.
பின்னர் பேசிய அமைச்சர், புதிதாக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி சுமார் 15ஆயிரம் கிராம ஊராட்சிகளில் ஓராண்டுக்குள் இணைய சேவை வழங்கப்படும் என்றார்.