கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர்மன்ற முதல் கூட்டத்தில் கவுன்சிலர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கைக்கலப்பில் ஈடுபட்ட போது, அவர்களை கண்டுகொள்ளாமல் தேசிய கீதம் பாடிக் கொண்டிருந்த நகர்மன்றத் தலைவரின் கையிலிருந்த மைக்கை ஒருவர் தட்டிவிட முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நகர்மன்றத் தலைவர் நசீர் தலைமையிலான கூட்டத்தில் 24 வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பங்கேற்ற நிலையில், வார்டுகளுக்கான வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக தீர்மானம் முன்வைக்கப்பட்டதில் பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கவுன்சிலர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அது கைக்கலப்பாக மாறியது.
அந்த சமயத்தில் கூட்டம் நிறைவடைந்ததாகக் கூறி மைக்கில் நகர்மன்றத் தலைவர் தனியாக தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்க அவரது கையிலிருந்த மைக்கை கவுன்சிலர் ஒருவர் தட்டிவிட முயன்றார்.