அங்கீகாரம் பெறாமல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வித் திட்டங்களுக்கு 2014-15ஆம் ஆண்டு வரை மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு பிறகு எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை எனவும் யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் பெறாத படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பது, யூஜிசியின் அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது, மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள யு.ஜி.சி., இதனால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் அந்த பல்கலைக்கழகமே முழு பொறுப்பு என தெரிவித்துள்ளது.