பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து துறை ரீதியாக ஆலோசனை செய்த பிறகே முடிவு செய்யப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது என்றார். கோடை விடுமுறை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகே தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.